Let's worship Lord Shiva On Pradosha day
We should celebrate Pradosha day, which is on Wednesday, by worshipping Lord Shiva. Let's worship Nandidev also. It is believed that worshiping Pradosha on Wednesdays will bring us gold and wealth.
Shiva worship is greatly influenced by Pradosha Puja. Pradosha Day is celebrated on Thiryodasi Tithi. Pradosha Pooja will be performed on the day itself between 4.30 pm to 6 pm on Thiryodasi Tithi. That is, on the day of Thiryodasi Tithi, Pradosha time is between 4.30 pm and 6 pm.
During this time, Pradosha worship is performed in all Shiva temples. Shiv Puranam says that Pradosha that comes every day has different benefits.
Acharya gurus say that Pradosha, which can come on Wednesday, can give us gold and material.
Lord Shiva can be worshiped by fasting Pradosha, reading Shiva Purana and chanting Namasivaya Mantra. Those who are not able to fast can read Shiv Purana and fast. Shivacharyas say that reciting the five-syllable mantra 'Namasivaya' at the time of Pradosha also gives great merit.
On Wednesday Pradosha, do not forget to have Shiva darshan. Be close to Nandi Deva. Pray to Shivalinga Tirumeni with Vilvam leave.
During Pradosha, 16 types of abhishekams are performed for Lord Shiva and Nandi. Giving whatever Naivedic material we can and offering Shiva darshan will give many more benefits.
Also, give a curd packet to anyone on Pradosha day. Offer any fruits to the cow. At the time of offering it, say 'Namasivaya Namasivaya Namasivaya' three times and offer it. You will get the blessings of Lord Shiva in the south. You can get gold and wealth and live comfortably; May rise in life.
புதன்கிழமையன்று வருகிற பிரதோஷ நன்னாளில், சிவபெருமானை வணங்குவோம். நந்திதேவரை வணங்கி ஆராதிப்போம். புதன் பிரதோஷ தரிசனம், நமக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் என்பது ஐதீகம்.
சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை. திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாகக் கொண்டாடுகிறோம். திரயோதசி திதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தில் அன்றைய நாளே பிரதோஷ பூஜை செய்யப்படும். அதாவது திரயோதசி திதி நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம்.
இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு விமரிசையாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சிவபுராணம். புதன் கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம், நமக்கு பொன்னும் பொருளும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரதோஷ விரதம் இருந்தும் சிவ புராணம் படித்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவபெருமானை வழிபடலாம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், சிவபுராணம் படித்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சொல்லிக் கொண்டே இருப்பதும் மகா புண்ணியம் தரும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
புதன் கிழமை பிரதோஷ நன்னாளில், மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்துங்கள். சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். பிரதோஷத்தின் போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த நைவேத்தியப் பொருட்களை வழங்கி சிவ தரிசனம் செய்வது இன்னும் பல நன்மைகளை வழங்கும்.
மேலும், பிரதோஷ நன்னாளில் எவருக்கேனும் தயிர்சாதப் பொட்டலத்தை வழங்குங்கள். பசுவுக்கு பழங்கள் ஏதேனும் வழங்குங்கள். அப்படி வழங்கும் தருணத்தில் ‘நமசிவாய நமசிவாய நமசிவாய’ என்று மூன்று முறை சொல்லி வழங்குங்கள். தென்னாடுடைய சிவனாரின் பேரருள் கிடைக்கும். பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று இனிதே வாழலாம்; வாழ்வில் உயரலாம்